-:A:B:C:D:E:F:G:H:I:J:K:L:M:N:O:P:Q:.R:S:T:U:V:W:X:Y:Z:-

8 April 2017

Aahaa enna inbam paralogam


Aahaa enna inbam paralogam


ஆஹா என்ன இன்பம் பரலோக இன்பம்
இன்ப இயேசு அளித்தனரே
அளவிற் கடங்கா புத்திக்கும் எட்டிடா
அன்பைக்கூற நாவும் போதுமோ



நீசதுரோகி எந்தனை பாசமாய் ஏற்றீரோ நீர்
பாவ உளையினிறே தூக்கி எடுத்தீரே நீர்


நாசபுரி நோக்கியே விரைந்து சென்ற என்னை
பாசம் வைத்தேன் உந்தனில் என்று கூவி அழைத்தீரே நீர்


நெரிந்த நாணல் என்னை முறித்திடும் தருணம்
பரிந்து பேசி அன்பால் நிலையாய் நிறுத்தினீர்


எச்சரிப்பின் சத்தத்தை தள்ளிவிட்ட போதிலும்
அன்பின் சவுக்கடியால் சேர்த்தன்பாய் ஆதரித்தீர்


காரிருள் சூழும் வேளை கலங்கித் தவிக்கையில்

காத்து நீர் என்னைத் தேற்றி கருத்தாய் ஆதரித்தீர்


பிராண நாதா உந்தனை என்று நான் கண்டிடுவேன்
ஆருயிர் நேசா உம்மை என்றும் காண ஆசை பொங்குதே


ஆழைப்பின் சத்தம் கேட்க நாட்கள் அதிகமாமோ
நேசர் மார்பில் சாய்ந்திட வாஞ்சை பெருகிடுதே



ஆகாய மேகந்தனில் சேர்த்திடும் நேரமிதில்
ஆனந்தம் ஆனந்தமே என்றென்றும் ஆனந்தமே

No comments:

Post a Comment

Join Telegram

Join Telegram
Telugu Christian Lyrics